Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

காலண்டர், டைரி ஆர்டர் குறைவு: உற்பத்தியாளர்கள் கவலை

காலண்டர், டைரி ஆர்டர் குறைவு: உற்பத்தியாளர்கள் கவலை

வழக்கமாக ஆகஸ்ட் மாதம் ஆடிப்பெருக்கு காலத்தில் மாதிரி காலண்டர் ஆல்பங்கள் வெளியிடப்பட்டு, அதன்மூலம் ஆர்டர்கள் பெறப்படும்.

பகிரவும் WhatsApp Facebook

ஜவுளி, பஸ் பாடி கட்டுதல், கொசுவலை உற்பத்தி உள்ளிட்ட தொழில்கள் கரூர் மாவட்டத்தில் பிரதானமாக உள்ளன. இத்தொழில் நிறுவனங்கள் ஆண்டுதோறும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு நிறுவனத்தின் பெயர் அச்சிடப்பட்ட காலண்டர்கள், டைரிகளை வழங்குவது வழக்கம். இதற்காக உள்ளூர் அச்சகங்கள் மற்றும் ஏஜென்டுகள் மூலம் சிவகாசி காலண்டர் தயாரிப்பு நிறுவனங்களிடம் ஆர்டர்கள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், நடப்பாண்டில் காலண்டர், டைரி தயாரிப்புக்கான ஆர்டர்கள் குறைந்துள்ளதாகத் தயாரிப்பாளர்கள் மற்றும் ஏஜென்டுகள் தெரிவித்தனர். வழக்கமாக ஆகஸ்ட் மாதம் ஆடிப்பெருக்கு காலத்தில் மாதிரி காலண்டர் ஆல்பங்கள் வெளியிடப்பட்டு, அதன்மூலம் ஆர்டர்கள் பெறப்படும். ஆனால், நடப்பாண்டில் மாதிரி ஆல்பங்களை உரிய நேரத்தில் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

இதுகுறித்து காலண்டர் விற்பனை ஏஜென்ட் ராமசாமி கூறியதாவது: 

சிவகாசியில் தயாரிக்கப்படும் காலண்டர்கள் நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டுகளில் ஆர்டர் வழங்கிய நிறுவனங்கள், நடப்பாண்டில் அதே அளவுக்கு ஆர்டர்களை வழங்கவில்லை. 

போர் சூழல் மற்றும் தொழில் மந்தநிலை உள்ளிட்ட காரணிகளால் காலண்டர் தயாரிப்புக்கான ஆர்டர்கள் குறைந்துள்ளன. இதனால், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் சுமார் 50 முதல் 65 சதவீதம் அளவுக்கே ஆர்டர்கள் கிடைத்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முந்தைய செய்தி
Ladakh proposes centre to strengthen power management
அடுத்த செய்தி
அன்பில் மகேஷ் மனுவுக்கு போலீஸார் பதிலளிக்க உத்தரவு

தொடர்புடைய செய்திகள்